பா.ஜ.கவினர் அமமுக மற்றும் அதிமுக கட்சியில் இருக்கும் சிக்கலை அறிந்து கொண்டு, அங்கிருக்கும் முக்கிய நிர்வாகிகளுக்கு வலை வீசத்தொடங்கியுள்ளனர்.
2014 ஆம் வருடத்திற்கு இடையில் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பாஜக பிற மாநிலங்களில் மேற்கொண்ட அரசியலை தமிழ்நாட்டில் தற்போது தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது. மாநிலங்கள் அனைத்திலும் பாஜகவை நிலை நாட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முக்கியமாக பிற கட்சிகளில் இருப்பவர்களை தங்கள் கட்சியில் இணைக்க முயல்கிறார்கள்.
திமுக மற்றும் அதிமுக விலிருந்து பலரும் பாஜகவிற்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.கவினர் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தபோதே அக்கட்சியிலிருந்த முக்கிய நிர்வாகிகள் சிலருக்கு வலை வீசினர். பாஜக இவ்வாறு செய்வதை நேரடியாக அல்லது வெளிப்படையாக எதிர்க்க முடியாத நிலை அதிமுகவிற்கு ஏற்பட்டது.
தற்போது கூட்டணியும் இல்லை என்ற பின் பா.ஜ.க, தங்கள் பக்கம் ஆட்களை சேர்க்கும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. தி.மு.கவில் இரண்டு தலைமைகள் தற்போது இருக்கிறது. எனினும் சசிகலா கட்சியில் சேர்ந்தால் முன்பு போல் அதிகாரமுள்ள வகையில் செயல்படுவாரா? என்று பல்வேறு குழப்பங்கள் இருக்கிறதாம்.
அமமுக கட்சியிலும் இதே போன்ற சிக்கல் இருக்கிறது. சசிகலாவை முன்னேற்றுவதற்காக அமமுக தொடங்கப்பட்டிருக்கிறது. எனினும் தற்போதைய நிலையில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் இருவருக்குமிடையில் பல முரண்பாடுகள் இருக்கிறதாம். இந்நிலையில் பாஜகவின் எச். ராஜா சில நாட்களாக அமமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த சில நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டிருக்கிறாராம்.
சசிகலா உறுதியாக தீர்மானம் மேற்கொண்டு செயல்படாமல் இருப்பதால் இரண்டு கட்சி நிர்வாகிகளது நிலைமையும் கவலைக்குரியதாக உள்ளதாம். அந்த நிர்வாகிகளை கணக்கெடுத்து வைத்துக்கொண்டு பாஜக தன் திட்டத்தை தொடங்கி இருக்கிறது என்று கூறப்படுகிறது.
நிர்வாகிகளை தொடர்பு கொண்டு எச் ராஜா, “எங்களிடம் சேர்ந்தால் சுதந்திரமாக நீங்கள் இருக்கலாம். உங்களை உள்ளூர் அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு கொண்டு செல்வோம்” என்று ஆசை வார்த்தைகள் கூறி கொண்டிருக்கிறாராம். எனவே, அமமுக மற்றும் அதிமுகவில் இருந்து சில முக்கிய நபர்கள் பாஜகவிற்கு சென்றாலும் ஆச்சரியமில்லை என்று கூறப்படுகிறது.