Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.க. கூட்டணியை விட்டு சிரோன்மணி அகாலி தளம் வெளியேறியது…!!

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக சிரோன்மணி அகாலிதளம் கட்சி அறிவித்துள்ளது.

மத்திய பாஜக அரசின் நாடாளுமன்றத்தில் வேளாண் தொடர்பான மூன்று மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டங்களுக்கு எதிர்கட்சிகள் விவசாயிகள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வேணான் சட்டங்கள் விவசாயிகளின்  நலனுக்கு எதிராக உள்ளதாக கூறி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த சிரோன்மணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த திருமதி ஹர்சிம்ரத் கவுர் பாதல் மத்திய அமைச்சர் பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சிரோன்மணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், அக்கட்சித் தலைவர் திரு சுப்வீர்சிங் பாதலுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு சுப்வீர்சிங் பாதல், பாஜக கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலி தளம் கட்சி வெளியேறுவதாக அறிவித்தார். இதன்மூலம் பாஜக உடனான தனது நீண்டகால கூட்டணியை சிரோன்மணி அகாலிதளம் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

Categories

Tech |