Categories
அரசியல்

“பிராமணர்களின் ஓட்டை மொத்தமாக அள்ள”…. பக்கா பிளான் போட்ட பாஜக…. வேற லெவல் தா போ….!!!

உத்திரபிரதேசத்தில் பாஜக பிராமண சமுதாயத்தின் ஓட்டுகளை பெறுவதற்கு புதிய திட்டம் தீட்டியிருக்கிறது.

உத்திரபிரதேசத்தில் பாஜக, பிராமண சமுதாயத்தின் வாக்குகளை மொத்தமாக பெறுவதற்கு 4 பேர் கொண்ட கமிட்டியை உருவாக்கியிருக்கிறது. கடந்த மாதம் 26ஆம் தேதியன்று இந்த கமிட்டி உருவாக்கப்பட்டது. தற்போது இந்த கமிட்டி மாநிலம் முழுக்க 25 நாட்கள் பயணம் மேற்கொண்டு, பிராமண மக்களின் மொத்த ஓட்டுகளையும் பாஜகவிற்கு கிடைப்பதை உறுதி செய்யவிருக்கிறார்கள்.

தற்போது வரை சுமார் 80 பிராமண சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் இந்த கமிட்டி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. இக்குழு லக்னோவில் தங்களின் முதல் கூட்டத்தை நடத்தியது. அடுத்ததாக இரண்டாவது கூட்டத்தை வரும் 4-ஆம் தேதி அன்று நடத்தவிருக்கிறது.

அதாவது, பாஜக, பிராமணர்களுக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறது, இனிமேல் என்ன செய்யப் போகிறது மற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள் போன்றவை தொடர்பில் அவர்களுக்கு தெரியப்படுத்தி, அதன் மூலம் அவர்களின் மொத்த ஓட்டுக்களையும் பெற திட்டமிடப்பட்டிருக்கிறது. இது தான் பாஜகவின் திட்டம்.

Categories

Tech |