மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் வசாய் பகுதியில் மின்சாரம் இரு சக்கர வாகனத்தில் சார்ஜில் இருந்தது. அப்போது அதன் பேட்டரி திடீரென வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் ஷபீர் ஷாவாஸ் சிறுவன் பலத்த காயமடைந்தார். அந்தச் சிறுவனை சம்பவம் அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இது குறித்து மணிக்பூர் காவல்நிலத்தில் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.