கோவையில் மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற கணவனை இரண்டு மனைவிகளும் சரமாரியாக அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூளுரை சேர்ந்த அரவிந்தன் என்பவர் கடந்த 2011ம் ஆண்டு பிரியதர்ஷினி என்பவரையும் கடந்த ஏப்ரல் மாதம் அனுப்பிரியா என்பவரையும் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு இரண்டு மனைவிகளும் தன்னை கொடுமைப்படுத்தியதாக கூறி அவர்களை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.
தற்போது மூன்றாவது திருமணத்திற்கு திட்டமிட இருப்பதை அறிந்த இரண்டு மனைவிகளும் அவரை சரமாரியாக அடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து பிரியதர்ஷினி மற்றும் அனுப்பிரியா ஆகியோர் காவல் நிலைத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.