Categories
உலக செய்திகள்

இம்ரான் கானை கொல்வதற்கு சதி… பரபரப்பு தகவலால் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு…!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானை கொலை செய்ய சதி நடப்பதாக பரவிய வதந்தியால் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானை கொலை செய்வதற்கு திட்டம் நடப்பதாக கூறப்பட்டது. எனவே, அவருக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டது. இதுபற்றி இஸ்லாமாபாத் நகரின் காவல்துறையினர் தெரிவித்ததாவது, இஸ்லாமாபாத் நகரில் 144 தடை உத்தரவு நடைமுறையில் இருக்கிறது.

இம்ரான்கான் செல்லும் பானி காலா பகுதியில் கூட்டங்களுக்கு கூட தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். அதையும் மீறி இம்ரான்கானிற்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு உச்சகட்ட பதிலடி தரப்படும். அவர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், தங்கள் நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் ஆகும். எனவே, அதற்கு சரியான பதிலடி அளிப்போம் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |