ஜம்மு காஷ்மீரில் தாக்குதல்கள் நிகழ்த்த ஜெய்ஷ்-இ-முகமது லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் திரும்பும் அமைதியை சீர்குலைக்க லஷ்கர்-இ-தொய்பா தளபதி மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினரும் சேர்ந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் லஷ்கர்-இ-தொய்பா தளபதி இந்தியாவில் மிகப்பெரிய தற்கொலை படை தாக்குதலை சந்திக்க உள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளதாகவும்,
இதற்காக தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் போரில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2 தீவிரவாத அமைப்புகளின் தலைவர்கள் பலர் சந்தித்து பேசியதாக உளவுத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில் தீவிரவாதிகளின் சதி திட்டத்தை முறியடிக்கும் வகையில் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையங்கள் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு சோதனை மேற்கொள்ளப்படுகிறது.