மகாராஷ்டிராவில் சிவசேனா அரசு பத்து ரூபாய்க்கு மதிய உணவு அளிக்கும் திட்டத்தை சோதனை முயற்சியாக தொடங்கியுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா அரசு சிவபூஜனா என்ற பெயரில் நண்பகல் உணவுத் திட்டம் மாவட்ட தலைநகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் விரிவுபடுத்த இருப்பதாக சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு தெரிவித்துள்ளது.
சிவசேனாவின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளது. மும்பை புனே நாசிக் உள்ளிட்ட நகரங்களில் இத்திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். பத்து ரூபாய்க்கு சோறு பருப்பு இரண்டு சப்பாத்தி ஒரு காய்கறி பொரியல் ஆகியவை வழங்கப்படுகின்றன.