அபுதாபிக்கு சென்ற சிறிய வகை க்ளைடர் விமானம் தரையிறங்கும் போது என்ஜின் பழுதாகி விபத்து ஏற்பட்டிருக்கிறது.
ஒரு என்ஜின் உடைய சிறிய வகை க்ளைடர் விமானம், அபுதாபிக்கு புறப்பட்டிருக்கிறது. அந்த விமானம் தரையிறங்க போகும் சமயத்தில், திடீரென்று என்ஜினில் பழுது உண்டானது. எனவே, தலைநகரில் இருக்கும் தனியார் விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு பதிலாக, விமானி அவசரமாக அபுதாவில் இருக்கும் ஷேக் சயீத் கிராண்ட் பகுதியில் தரையிறக்கினார்.
அப்போது வாகனம் இறங்கும் இடத்தில் விபத்து ஏற்பட்டது. அதன் இறக்கை பகுதி சேதமடைந்திருக்கிறது. மேலும், இதில் விமானிக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.