ஆஸ்திரேலியாவில் நடுவானில் பறந்த போது, விமானத்தின் என்ஜினில் பழுது ஏற்பட்டு கடலுக்குள் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் perth என்னும் நகரத்தின் கடலில் தான் விமானம் விழுந்திருக்கிறது. சிறிய வகை விமானத்தில் இரண்டு நபர்கள் பயணித்துள்ளனர். அப்போது, விமானம் நடு வானத்தில் பறந்து கொண்டிருந்த சமயத்தில், என்ஜினில் பழுது ஏற்பட்டிருக்கிறது. எனவே, விமானி, உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
அதன்பின்பு விமானம், விமானியின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. அதனையடுத்து, விமானம் கடலில் விழுந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Scenes over in Perth. Plane has crashed into the ocean at City Beach – I’m told due to engine failure. No one believed to be injured pic.twitter.com/7Yt57TKCuf
— Sam McManus (@SamFMcManus) November 13, 2021
விமானம் கடலில் விழுந்தாலும், விமானியும், 2 பயணிகளும் துரிதமாக செயல்பட்டு, விமானத்திலிருந்து வெளியேறி, கடலில் நீந்தி பாதுகாப்பாக கரைக்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நல்ல வேளையாக, இரண்டு பயணிகளும் காயமடையவில்லை என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
விமானம், கடலில் விழுந்தவுடன் காவல்துறையினர், அவசர உதவிக்குழுவினர் மற்றும் காவல்துறையினரின் ஹெலிகாப்டரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.