Categories
உலக செய்திகள்

“விபத்துக்குள்ளான கிளைடர்!”.. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

சுவிட்சர்லாந்தில், கிளைடரும், சிறிய ரக விமானமும் ஒரே சமயத்தில் விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சுவிட்சர்லாந்தில் உள்ள Thurgau என்ற மாகாணத்தில் கிளைடர் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அதில் விமானி மட்டும் இருந்துள்ளார். அந்த சமயத்தில் சிறிய ரக விமானமான Robin DR400-ம், Neuchâtel என்ற மாகாணத்திலிருந்து புறப்பட்டு சென்றிருக்கிறது. இந்த விமானத்தில் விமானி, ஒரு பெண், ஆண் மற்றும் ஒரு குழந்தை இருந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் காலையில் சுமார் 9:30 மணிக்கு கிளைடர் ஒன்று விபத்து ஏற்பட்டு, விமானி உயிரிழந்ததாக காவல் துறையினருக்கு அவசர உதவிக்குழுவினரால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிக்கு விரைவில் செல்ல முடியாது. எனவே காவல்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் அதற்கு அடுத்த நாள் சிரமப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்றுவிட்டனர்.

அங்கு கிளைடர் விழுந்துகிடந்த இடத்திற்கு சிறிது தூரத்தில் சிறிய ரக விமானமும் விபத்து ஏற்பட்டு கிடந்துள்ளது. அதில் இருந்த விமானி மற்றும் மூன்று பயணிகளும் பலியாகியுள்ளனர். மொத்தமாக 2 விமானங்களிலும் பயணித்த ஐந்து நபர்களும் பலியானது தெரியவந்தது. எனினும் விபத்து எதனால் ஏற்பட்டது என்பது தெரியாததால், அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

Categories

Tech |