கனடா நாட்டிற்கு அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட ஏர் கனடா விமானம் பாதி வழியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானமானது, அமெரிக்காவின் சான் டியாகோ நகரிலிருந்து கனடா நாட்டின் வான்கூவர் நகருக்கு பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றிருக்கிறது. அப்போது, இரவு நேரத்தில் திடீரென்று லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் விமானி அவசரமாக விமானத்தை தரையிறங்கினார்.
இதனால், பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பில், பெடரல் ஏவியேஷன் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், விமானத்தின் எஞ்சின் மற்றும் எரிபொருளில் பிரச்சனை ஏற்பட்டதால், விமானி அவசரமாக தரையிறக்கினார். விமானத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் விமானிகள் கவனித்து வந்தனர். எங்களது விமானிகள், இவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நன்றாக பயிற்சி பெற்றிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.