நெற்பயிர்களை குலை நோய் தாக்கியதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டி விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராம்பூர் கிராமத்தில் நெல் சாகுபடியானது 300க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து பயிர்களையும் குலை நோய் தாக்கி சுமார் 200 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் இந்நோயால் சேதம் அடைந்துள்ளது. இதனையடுத்து காரியாபட்டி வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் இந்நோய் குறித்து தகவல் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து வேளாண் அலுவலர் முருகேசன், காரியாபட்டி வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராணி, மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களை நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டி விவசாயிகள் வேளாண் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும் இசசம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வேளான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.