800 ஏக்கர் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானதால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள உச்சிமேடு, நெல்லிக்குப்பம், தாழங்குடா, நாணமேடு, திருமாணிகுழி, நடுவீரப்பட்டு, புதுப்பாளையம், கட்டார் சாவடி, வானமாதேவி ஆகிய இடங்களில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட காய்கறி வகைகள், நெற்பயிர்கள் அங்கு பெய்த கனமழையால் தண்ணீரில் மூழ்கி விட்டது. மேலும் அங்கு 800க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்து விட்டன.
இதனையடுத்து அங்கு பயிரிடப்பட்ட மரவள்ளி, காய்கறிகள், உளுந்து, பூ வகைகள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை உருவாகியுள்ளது. மேலும் ஏற்கனவே அறுவடை செய்த நெல் பயிர்களை விவசாயிகள் குமளங்குளம் ஏரியின் அருகே குவித்து வைத்திருந்த நிலையில், அங்கு பெய்த கனமழை காரணமாக அனைத்து நெற்பயிர்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதோடு, நெல் மூட்டைகளை தண்ணீரில் மூழ்கிவிட்டது. இதனால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் இருக்கின்றனர்.