இங்கிலாந்தில் இருக்கும் ஒரு பூங்காவில் உலகிலேயே அதிக விஷத்தன்மை கொண்ட செடிகள் தோட்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்தில் இருக்கும் Northumberland என்ற பகுதியின் Alnwick பூந்தோட்டத்தில் இருக்கும் செடிகளை நுகர்ந்தாலோ அல்லது தொட்டால் கூட உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனினும் நிர்வாகிகள் இதனை கண்காணித்து வருவதால், மக்கள் இங்கு செடிகளை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
அதாவது இந்த பூந்தோட்டத்தில் ஒரு சில இடங்களில் இந்த விஷச்செடிகள் நூற்றுக்கும் அதிகமாக வளர்க்கப்பட்டு வருகிறது. இது உலகிலேயே மிகவும் ஆபத்து நிறைந்த தோட்டம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னால் இங்கு சென்ற மக்கள் பலர் மயக்கமடைந்து கீழே விழுந்திருக்கிறார்கள்.
இச்செடிகளை தொட்டால், அதில் உண்டாகும் விளைவு சுமார் 7 வருடங்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷச்செடிககளின் பூக்கள் பார்ப்பதற்கு ஈர்க்கக்கூடிய வகையில் இருக்கும். இதனால் பார்வையாளர்கள் கவரப்படுகிறார்கள். மேலும் இந்த தோட்டத்தை கவனித்து வரும், பணியாளர்கள் பாதுகாப்புக்கவச ஆடை அணிந்து செல்ல வேண்டும்.
இந்த தோட்டம் பிரிட்டனைச் சேர்ந்த Jane Percy என்ற பெண் தொழிலதிபரின் திட்டத்தால் உருவாக்கப்பட்டது. இவர் இந்த தோட்டம் குறித்த பல்வேறு புத்தகங்களை எழுதியிருக்கிறார்.