Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த பெற்றோர்…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் செய்யது மீரான் என்பவர் வசித்து வருகிறார். இவர் முட்டை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த வந்த முகமது அசன் என்ற மகன் உள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் முகமது அசன் வீட்டிலிருந்து பாடங்களை படித்து வந்தார். இந்நிலையில் இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முகமது அசன் திடீரென காணாமல் போனதை கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் முகமது அசனை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது செய்யது மீரானின் பக்கத்து வீட்டின் பின்புற வளாகத்தில் முகமது அசன் கயிற்றால் தூக்கிட்டு இறந்து கிடந்ததை அவரது குடும்பத்தினர் பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து அவரது குடும்பத்தினர் ஏர்வாடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முகமது அசனின் சடலத்தை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்தி விசாரணையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த முகம்மது அரன் திடீரென எழுந்து பக்கத்து வீட்டின் பின்புற வளாகத்துக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முகமது அசன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |