Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிளாஸ்மா தானம் செய்யும் படி …ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சச்சின்…!!!

கடந்த மார்ச் 27ம் தேதி  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ,சச்சின் டெண்டுல்கர் தொற்றிலிருந்து குணமடைந்து உள்ளார் . 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த சச்சின் டெண்டுல்கருக்கு, கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி தொற்று ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , கடந்த 8ஆம் தேதியன்று வீடு திரும்பி ,சில நாட்களுக்கு  தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது அவர் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து விட்டார். நேற்று தன்னுடைய 48வது பிறந்த நாளை அவர் குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடியுள்ளார். அவருடைய பிறந்தநாளுக்கு ரசிகர்களும் ,கிரிக்கெட் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு ,ரசிகர்களிடம்  சச்சின் டெண்டுல்கர் வேண்டுகோள் வைத்தார் . தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், வீடியோ பதிவில் பேசியுள்ளார். அதில்  கடந்த ஆண்டு பிளாஸ்மா தானம் செய்யும் மையத்தை, தொடங்கி வைத்தேன் என்றும் ,  எனவே கொரோனவிலிருந்து  மீண்டவர்கள், தயவுசெய்து உங்களுடைய பிளாஸ்மாவை தானம் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார். இந்த  பிளாஸ்மா கொரோனா  நோயாளிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் ,நானும் பிளாஸ்மா தானத்தை செய்ய உள்ளதாகவும் வீடியோ பதிவில் சச்சின் கூறியுள்ளார்.

Categories

Tech |