Categories
உலக செய்திகள்

பிளாஸ்டிக் சர்ஜரியில் நடந்த குளறுபடி… மூக்கை இழந்த பிரபல நடிகை… வெளியான புகைப்படம்…!

சீனாவில் பிரபல நடிகை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது மூக்கை இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்த பாடகியும் நடிகையுமான கவோ லியு கடந்த சில மாதங்களாக வெளியில் வரவில்லை. இந்நிலையில் அவர் வெளி வராததற்கான காரணத்தை  சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நான் அழகுக்காக செய்துகொண்ட பிளாஸ்டிக் சர்ஜரியில் எனது மூக்கின் நுனிப்பகுதியை இழந்துவிட்டேன்.

எனது மூக்கை கூர்மையாக்கி கொண்டால் எதிர்காலத்தில் சிறந்ததாக அமையும் என்று நம்பி நான் இந்த சிகிச்சை செய்தேன். ஆனால் சிகிச்சையில் ஏற்பட்ட குளறுபடியால் அடுத்த ஒரு வருடத்திற்கு என்னால் எனது மூக்கை சரி செய்ய முடியாது என்று தெரிவித்தார். மேலும் அவர் தனது தற்போதைய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |