பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதால் முக அழகே இல்லாமல் போய்விடும்.
திரையுலகில் பல நடிகர், நடிகைகள் தனது அழகினால் ரசிகர்களை மகிழ்விக்க விரும்பி பல அழகு சாதனை பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். அதாவது முக அழகை பராமரிப்பது, தோல் மற்றும் இளமையான தோற்றத்திற்காக அழகு சாதன பொருட்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஒரு சில நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற மருத்துவ சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி தோலின் சுருக்கங்களை மறைத்து மீண்டும் இளமையாக காட்சி தர முயற்சிக்கின்றனர். அந்த வகையில் ஒரு சில நடிகைக்கு மட்டுமே இந்த சிகிச்சை ஒத்துப் போகின்றது, பக்க விளைவுகளையும் இந்த சிகிச்சை ஏற்படுத்தி விடுகின்றது.
இது குறித்து நடிகை கொய்னா மித்ரா கூறியதாவது, ” எனது மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதால் விகார தோற்றம் ஏற்படுத்தி தனது நடிப்புத் தொழிலையே பாதித்துவிட்டது” என்று அவர் கூறியுள்ளார். மேலும் நடிகை சுருதிஹாசன் கூறியதாவது, “தனது மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட விஷயத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இது என்னுடைய முகம் அதனை என்ன வேண்டும் என்றாலும் செய்யும் உரிமை எனக்கு உண்டு” என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்தி நடிகையான கத்ரீனா கைப் தனது “போன் பூத்” என்ற திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கானுடன் நடனம் ஆடினார். அந்த நடனத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் வேதனையுடன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததால் முக அழகே கெட்டுப் போய்விட்டது என்று சமூக வலைத்தளத்தில் தனது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து ரசிகர்கள் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளதாவது, “உண்மையில் கடவுள் கொடுத்த அழகை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் டாக்டர் எடுத்து சென்று விட்டனர் என்றும் கத்ரீனா கைப்க்கு அழகான முகம் மற்றும் இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக அதிகளவில் அழகு சார்ந்த பொருட்களை பயன்படுத்தியதால் முற்றிலும் கெட்டுவிட்டது. அவர் தற்போது வயது முதிர்ந்தவராகவும் விகார தோற்றமுடையவராகவும் காணப்படுகின்றார்” என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள்.