Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஆட்டவோ…. அசைக்கவோ… ஏன் தொட கூட முடியாது …. ஸ்டாலின் அதிரடி பேச்சு …!!

தமிழகத்தில் இந்த ஆட்சி நீடிக்க பாஜக நினைக்கின்றது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவை காணொளி காட்சி மூலம் நடத்தி வைத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசினார். அப்போது தமிழகத்தில் இந்த நிலை இன்னும் 6 மாதம் மட்டும் தான். அதன் பின் காட்சி மாறும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆட்சி மாறும் என ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள் திடமான தீர்ப்பை உதயசூரியனுக்கு தர ஆயத்தமாக உள்ளனர் என்று தெரிவித்த மு க ஸ்டாலின், திமுகவை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ,  ஏன் தொட்டுப் பார்க்கக் கூட முடியாது என்று முக ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories

Tech |