Categories
கிரிக்கெட் விளையாட்டு

எங்களுக்கும் ஆர்வம் இருக்கு…. ஆனால் ரசிகர்கள், வீரர்கள் பாதுகாப்பு முக்கியம் – பிசிசிஐ

வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பை பொறுத்தே இந்திய அணி உலக கோப்பை தொடரில் பங்கேற்குமா என்பது குறித்து தெரியவரும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது

ஆஸ்திரேலியாவில் இருக்கும் மைதானங்களில் அடுத்த மாதத்திலிருந்து ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்திருந்தார். இதனால் டி20 உலகக் கோப்பை தொடர் நடத்தப்படும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமானது. இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் கூறுகையில் “உலக கோப்பை தொடரில் பங்கேற்க மிகுந்த ஆர்வத்துடன் இந்திய அணியும் இருக்கின்றது. ஆனால் அணியின் பயணம் குறித்து மத்திய அரசு அனுமதி கொடுக்க வேண்டும்.

விதிமுறைகள் அரசின் அறிவுரைப்படியே முடிவு செய்ய முடியும். இப்போதே மைதானத்திற்குள் ரசிகர்களை அனுமதிப்பது சரியானதாக இருக்குமா என்பது தெரியவில்லை. மிகவும் ஆபத்து நிறைந்த  முடிவாகவும் அதனைப் பார்க்க தோன்றுகிறது. அதோடு  உலக கோப்பை தொடருக்கு இன்னும் அதிக நாட்கள் உள்ளன. ஆனால் இந்திய அணி தொடரில் பங்கேற்குமா என்பது குறித்து பொறுத்திருந்துதான் முடிவு செய்யமுடியும். எங்களுக்கு வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பே முக்கியம்” எனக் கூறினார்.

Categories

Tech |