Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எந்த உதவியும் செய்யல… வறுமையில் வாடும் இசைக்கலைஞர்கள்… அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இசைக்கலைஞர்கள் நிவாரண தொகை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் வசித்து வரும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் சுபநிகழ்ச்சிகள் மூலம் வருமானம் ஈட்டி வந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றின் 2 – வது அலை வேகமாக பரவி வருவதால் அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் ஜாகீர் சின்னம்மாபாளையம் பகுதியில் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இசை கலைஞர்கள் 100 – க்கும் அதிகமானா இசைக்கலைஞர்கள் அப்பகுதியிலுள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் இசைக்கருவிகளை வாசித்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி தவிப்பதாகவும், நிவாரண தொகை வழங்க வேண்டும் எனவும் நூதன முறையில் இசைக் கலைஞர்கள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இதுகுறித்து ரஞ்சித் என்ற இசைக் கலைஞர் கூரும் போது கடந்தாண்டு கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சமயத்திலும்  தமிழக அரசு எங்களுக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை என கூறியுள்ளார். தற்போது கொரோனா தொற்றின் 2 – வது அலை காரணத்தினால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வருமானமின்றி தவிக்கும் எங்களுக்கு உரிய நிவாரண நிதி அளிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |