டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 முறைகேடு விசாரணையை சி.பி.ஐ .க்கு மற்றகோரிய மனு 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்சி. குரூப்-4 தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள 16 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இதன் முடிவுகள் வெளியான நிலையில் ராமேஸ்வரம் தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடத்தை பிடித்துள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த மதுரையை சேர்ந்த முகமது ரஸ்வி என்ற வழக்கறிஞர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர் மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
அதில் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரித்தால் உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியாது எனவும், இந்த விசாரணையை சி.பி.ஐ அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இதனை தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி மற்றும் நீதிபதி ஹேமலதா அமர்வு முன்பு விசாரித்தனர். அப்போது சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைப்பற்றிய முறைகேடு தொடர்பான ஆவணங்களை பாதுகாப்பாக வைக்கவும், தமிழ்நாடு தலைமைச் செயலர் இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இவ்வழக்கை நான்கு வாரங்களுக்கு அவர்கள் ஒத்திவைத்தனர்.