Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உடனே உங்களுக்கு சொல்லிடுவோம்… அதிகாரிகளின் புது ஏற்பாடு… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!

சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுவினை போடுவதற்காக பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது நடத்தப்படுவது வழக்கம். அப்போது முதியவர் உதவி தொகை, குடிநீர் வசதி, வீட்டு மனை பட்டா போன்ற பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்களாக எழுதி கலெக்டரிடம் கொடுக்கின்றனர். தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மனு அளிப்பதற்காக சப் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அங்கு தனியாக வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் தங்களது கோரிக்கை மனுக்களை போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறும்போது, மக்களிடம் நேரடியாக மனு பெறுவதை தவிர்க்கும் பொருட்டு சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஒரு பெட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பொதுமக்கள் தங்களது மனுவினை போட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு அந்த மனுவை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், என்னென்ன நடவடிக்கைகள் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது என்று மனுதாரர்களுக்கு தெரிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

Categories

Tech |