Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இந்த டைம்ல அனுமதி தாங்க… பெரிதும் பாதிக்கப்படும் வாழ்வாதாரம்… கலெக்டரிடம் அளித்த மனு…!!

தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் சார்பில் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சலூன் கடை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் சார்பில் தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் செயலாளர் சசிகுமார் போன்றோரின் தலைமையில் நிர்வாகிகள் சென்றுள்ளனர். இவர்கள் கலெக்டர் நாகராஜனிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கடந்த ஆண்டு கொரோனா ஊரங்கால் சலூன் கடை அடைக்கப்பட்ட போது தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அதிலிருந்து மீண்டு வருவதற்குள் சலூன் கடைகளை மீண்டும் அடைக்க உத்தரவிடுவது தங்களது வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அரசு அறிவித்த முறையான கட்டுப்பாட்டு வழிமுறைகளை தாங்கள் பின்பற்றுவதால் தினமும் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டும் முடி திருத்தும் பணியை செய்ய அனுமதிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |