அத்தியாவசியமற்ற பொருட்களையும் விற்க அனுமதிக்குமாறு அமேசான், flipcart உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களை தவிர வேறு எந்த பொருள்களையும் விற்பனை செய்யக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஆன்லைனிலும் கூட அத்தியாவசியப் பொருட்களை தவிர இதர பொருட்களை விற்க கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் நாங்கள் பாதுகாப்பான முறையில் சமூக இடைவெளியை கடைபிடித்து மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இதுவரை விநியோகம் செய்து வந்துள்ளோம். எனவே அத்தியாவசிய பொருட்கள் மட்டுமல்லாமல் இதர பொருள்களையும் விற்க அனுமதி வழங்குமாறு அந்நிறுவனங்கள் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.