Categories
மாநில செய்திகள்

“Please இவரை எப்படியாவது கூட்டிட்டு போங்க”…. நாயுடன் சேர்ந்து உணவு சாப்பிடும் அவலம்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!!!

பாதிக்கப்பட்ட நபர் நாய்களுடன் சேர்ந்து சாப்பிடும் காட்சி காண்போரின் மனதை கலங்க வைத்துள்ளது.

திருத்தணியில் உள்ள ஆறுமுக சுவாமி கோவில் தெருவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியின்  அருகே கடந்த ஒரு மாதமாக  மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கிழிந்த ஆடையும், சில நேரங்களில் ஆடை எதுவும் இல்லாமல் அதே பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் கால்வாயில் உட்கார்ந்து இருந்து வந்துள்ளார். மேலும் பள்ளி அருகே அமைந்துள்ள அங்கன்வாடி வையத்தில் மதியம் மாணவர்கள் சாப்பிட்டு விட்டு மீதமுள்ள உணவை சாலையோரம் குப்பை தொட்டியில் கொட்டுகின்றனர். இதனை நாய்களுடன் சேர்ந்து அந்த நபர் சாப்பிட்டுள்ளார். இதனை பார்க்கும் பொதுமக்கள் மிகவும் வருத்தம் அடைந்தனர். ஆனால் இந்த பள்ளியின் எதிரே அரசு பொதுநல மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தினம்தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். ஆனால் அந்த நபரை மருத்துவமனையின்  பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் பார்த்தும் கூட காப்பகத்தில் சேர்க்கவில்லை. இதனையடுத்து சமூக ஆர்வலர்கள் அவரை மீட்டு மனநலம் காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பொதுநல மருத்துவர் ஒருவர் கூறியதாவது.

இந்நிலையில் இயங்கி  வந்த அவசர சேவை மற்றும் மீட்பு காப்பகங்கள் கடந்த  2019-ஆம் ஆண்டு முதல் பல மாவட்டங்களில் விரிவுபடுத்தப்பட்டு மனநல காப்பகங்கள் செயல்பட்டு வருகிறது.ஆனால் மனநல மருத்துவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தாமாகவே முன்வந்து அவரது மனநிலையை சோதிக்கலாம். மேலும் அந்த நபரை நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி ஒரு  உத்தரவின் மூலம் அவரை மனநல காப்பகத்தில் சேர்க்கலாம். அதேபோல் மனநிலை பாதிக்கப்பட்டு தெருகளில் சுற்றி திரிபவர்களையும் காவல்துறையினர் பிடித்து நீதிபதியின் உத்தரவு மூலம்  மனநல மருத்துவ சோதனைக்கு அனுப்பி மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தால் அவர்களை மனநிலை காப்பகத்தில் சேர்க்க முடியும். ஆனால் அவர்களின் விருப்பம் இல்லாமல் எப்படி சேர்க்க  முடியும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |