Categories
தேசிய செய்திகள்

ப்ளீஸ், தம்பி என்ன விட்டுடு… நான் உன்னோட அத்தை… கெஞ்சியும் மனமிறங்காமல் மருமகன் செய்த கொடூர சம்பவம்…!!!

சொத்துக்காக சொந்த அத்தையை கொலை செய்து புதைத்த சம்பவம் ஹரியானா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

ஹரியானா மாநிலம் அம்பாலா என்ற மாவட்டத்தில் வசித்து வரும் அமர்ஜித் என்பவருக்கு 21 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. இவரது மகன் 51 வயதில் குரு பிரித்து என்ற மகன் இருந்துள்ளார். இவர்களுடன் சுரிந்தர் கபூர் என்ற தங்கை இருந்துள்ளார். அவர் திருமணம் ஆகாமல் இருந்து வந்துள்ளார். மேலும் அமர்ஜித் 21 ஏக்கர் நிலத்தை பகிர்ந்து சகோதரிக்கும் கொடுக்க முடிவு செய்திருந்தார். ஆனால் அவரது மகன் அமர்ஜித் முழு சொத்தும் தனக்கு கிடைக்க வேண்டும் என்று எண்ணினார். இதனால் அத்தையை எப்படியாவது கொலை செய்துவிட வேண்டும் என்று திட்டம் தீட்டினார்.

அப்படி செய்தால் அவருடைய பங்கும் தனக்கு வந்து சேரும் என நினைத்தார். கடந்த வாரம் குடும்ப விழா ஒன்றில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அதில் அத்தை சுரிந்தர் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குருபிரீத் வாருங்கள் அத்தை நான் உங்களை பைக்கில் கொண்டு போய் விடுகிறேன் என கூறி அழைத்துச் சென்றார்.

அதை எடுத்து அவரோட அவரது நண்பரும் வேறு ஒரு பைக்கில் பின்தொடர்ந்து வந்தார். பிறகு அருகிலுள்ள வயலுக்கு கூட்டிச்சென்று அத்தையின் கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொலை செய்துவிட்டு, பின்னர் அங்கேயே புதைத்து விட்டனர். உறவினர்கள் அனைவரும் கேட்டபோது அவர் காணவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், நடந்த சம்பவம் அனைத்தும் வெளியில் வந்தது. பின்னர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |