நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வெந்து தணிந்தது காடு”. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து இந்த திரைப்படம் வெளியாகி 50 நாள் நிறைவடைந்ததையடுத்து விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்று பேசிய சிம்பு, இது தமிழ் சினிமாவின் பொற்காலம் என நினைக்கின்றேன். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன், லவ் டுடே, விக்ரம் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது. நல்ல கதை இருந்தால் கண்டிப்பாக மக்கள் கொண்டாடுவார்கள்.
இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் மிகவும் பயமாக இருந்தது. ஆனால் இந்த திரைப்படத்தை வெற்றி படமாக மாற்றியது எங்களுக்கு உண்மையில் மிகவும் ஆச்சர்யத்தை தந்தது. மேலும், ஒரு படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ரொம்ப சிரமப்படுகிறார்கள்.
நீங்கள் தினமும் அப்டேட் கேட்டால் தவறான முடிவுகளை எடுக்க நேரிடுகிறது. அதனால் ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்துக் கொள்கிறேன். தயவுசெய்து ”எந்த ஒரு படத்தின் அப்டேட்டையும் கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள்” என சிம்பு தெரிவித்துள்ளார்.