Categories
அரசியல் மாநில செய்திகள்

ப்ளீஸ் ADMKவை அழிச்சுடாதீங்க..! DMKகூட சேர்ந்துக்கிட்டு… தேர்தலில் பரபரப்பு சம்பவம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், இந்த கட்சியை தயவுசெய்து அழிக்காதீர்கள், அழிப்பதற்கு முற்படாதீர்கள். 2021 சட்டமன்ற தேர்தல் நடக்கின்றபோது, ஒவ்வொரு பாராளுமன்ற சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற போதெல்லாம் அம்மா அவர்களும், புரட்சித்தலைவர் அவர்களும், ஒரு குழு நியமிப்பார்கள், கூட்டணி கட்சியோடு பேசுவதற்கு, தொகுதி பங்கீடு செய்வதற்கு..

ஆனால் எடப்பாடி முதலமைச்சராக இருக்கின்றபோது இவர் ஒரு நாளும் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தோடு கலந்து பேசவில்லை. எடப்பாடியாவே தன்னிச்சையாக யாரோடு கூட்டு சேர்கிறோம் என்று முடிவெடுப்பார். யாரோடு, எப்படி பேசுகிறார் என தெரியாது, கூட்டணி அமைக்கிறார்கள் என்று தெரியாது, எவ்வளவு தொகுதி கொடுக்கிறார் என்பதும் தெரியாது. அப்படி கேவலமாக நடந்து கொண்டார்கள்.

அண்ணா திமுகவில் சொல்லுவதற்கே வெட்கமாக இருக்கிறது, அண்ணன் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கும், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் அவர்கள் மாதிரி நிறைய சட்டமன்ற உறுப்பினர்களாக போட்டியிட்டவர்களை, இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமைச்சர் பதவி கேட்டு விடுவார்களோ என்பதற்காக 10, 15 வேட்பாளர்களுக்கு எதிராக திமுக கூட்டணியில் வேட்பாளர்களை போட்டியிட்டவர்களுக்கு,  பணத்தை கொடுத்து எடப்பாடியே தோற்கடிக்க வைத்தார் என பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தார்.

அப்படி கட்சிக்கு விரோதமாக, துரோகமாக செயல்பட்டவர் தான் எடப்பாடியும், எடப்பாடியோடு இருப்பவர்களும் அண்ணா திமுக வேட்பாளர்களை இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக பழனியாற்றிய எடப்பாடி பழனிச்சாமியை இந்த கட்சியில் இருப்பது நன்மையா? துரோகமா? தொண்டர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Categories

Tech |