Categories
அரசியல் மாநில செய்திகள்

ப்ளீஸ் விட்டுக்கொடுத்துறாதீங்க..! ஓபிஎஸ் காலில் விழுந்து கதறல்… பதவி வெறிபுடித்த எடப்பாடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளராக இருக்கும் புகழேந்தி,  ஒற்றைத் தலைமை என்று சொன்னது யார்? ஒற்றை தலைமை வேண்டும் என்று கேட்டது யார் ? நியாயமாக பேசுவோம்.. அதை உருவாக்கியது யார் ? கொளுத்தி போட்டது யார் ? கட்சியில் பிரச்சனை பண்ணியது யார் ? இன்னைக்கு பேசுகிறார்கள் பதவி வெறி பிடித்தவர் என்று…

ஏன் சொல்லுவீங்க சார்!  நீங்க சொல்லுவீங்க!  11 சட்டமன்ற உறுப்பினரை கொண்டு வந்து நீங்க முதல்வராக இருப்பதற்கு அன்றைக்கு விட்டுக் கொடுத்தார் பாருங்க அவர் பதவி வெறி படித்தவர். இந்த ஆட்சி தொடர,  மத்திய அரசிலிருந்து பிரதமர் கூட  சமாதானம் செய்து வச்சாரு என்று சொன்னார்,  அதையும் செய்தார்.

தங்கமணியும் வேலுமணியும் கெஞ்சினார்கள். அடுத்த கெஞ்சல் தங்கமணியும்,  வேலுமணியும் அண்ணா இந்த தடவை இவர் முதல்வர்,  அடுத்த தடவை நீங்க முதல்வர் என  வந்து கெஞ்சினார்கள். என் முன்னாடி வந்து பேசுங்கள் நடந்ததா ? இல்லையா ? என்று. அப்படியெல்லாம் சமாதானம் படுத்தினீர்கள். கட்சியினுடைய முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்தார். அது கட்சிக்கு செய்த துரோகம்,  நீங்க சொல்ற மாதிரி அது பதவி வெறி.

அண்ணா விட்டுக்கொடுத்துறாதீங்க எதிர்கட்சித் தலைவர்  பதவியை…  உங்கள தான் அம்மா முதலமைச்சராக இரண்டு முறை தேர்வு செய்தார்கள். அப்புறம் முதலமைச்சரா நீங்க இருந்தீங்க. 10 முறை பட்ஜெட் சமர்ப்பித்த ஒரு பெரிய அனுபவம் இருக்கு அண்ணா..  ப்ளீஸ் விட்டுக் கொடுத்துராதீங்கன்னு தொண்டர்களும்,  மற்றவர்களும் காலில் விழுந்து கேட்டபோது கூட,  தகராறு செய்து எதிர்க்கட்சித் தலைவரை வாங்கினீங்க. அப்ப கூட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தனபால் எதிர்க்கட்சி தலைவராக இருக்க வேண்டும் என்று சொன்னார் அண்ணன். அதையும் ஒத்துக்கலையே… யாருக்கு பதவி வெறி ? என கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |