Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

வேண்டாம் அங்கே போகாதீங்க ப்ளீஸ்…! சூறாவளி காற்று இருக்கு… 4நாளுக்கு எச்சரித்த வானிலை ஆய்வு மையம் ..!!

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேலே நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் அனேக இடங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் அடுத்த நான்கு நாட்களுக்கு இருக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக அடுத்த நான்கு நாட்களுக்கு குமரி கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள்,  தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளுக்கு பலத்த காற்று 50 கிலோமீட்டர் வேகத்தில் வரை வீசக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல் கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகள், லட்சத்தீவு –  மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு அடுத்த நான்கு நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவாக  தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் 23cm மழை வரை பதிவாகியுள்ளது அதேபோல் அமராவதி அணை ஆண்டிபட்டி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பத்து சென்டிமீட்டர் மழை வரை பதிவாகியுள்ளது. குறைவாக கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, கோயம்புத்தூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 2 சென்டிமீட்டர் மழை குறைந்த அளவாக பதிவாகியுள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |