டெல்லியில் சுய ஊரடங்கை கடைபிடிக்காதவர்களுக்கு ரோஜாப்பூ வழங்கி காவல்துறையினர் அறிவுரை செய்து வீட்டிற்கு அனுப்பி வருகின்றனர்.
கொரோனோ வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக சுய ஊரடங்கு இந்தியா முழுவதும் பொதுமக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். ஆனாலும் ஒரு சில இளைஞர்கள் ஊரடங்கை மீறி பிரதமரின் அறிவுரையை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வெளியில் சுற்றித் திரிந்து வருகின்றனர்.
இதை அந்தந்த மாநிலங்களில் உள்ள அதிகாரிகள் கண்டால் உடனடியாக அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் சுய ஊரடங்கு கண்டுபிடிக்காத நபர்களை பிடித்து ரோஜாப்பூ வழங்கி அவர்களிடம் ஊர் அடங்குக்கான காரணம் குறித்து விவாதித்து பின் வீட்டிற்கு சென்று ஊரடங்கை கடைபிடிக்குமாறு டெல்லி காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.