Categories
தேசிய செய்திகள்

கொஞ்சம் Help பண்ணுங்க…. தமிழகத்தை நம்பும் கேரளா… முதல்வருக்கு கடிதம் …!!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் கேரள மக்களுக்கு ஏதுவாக வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் கிடைப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் தமிழக அரசு காய்கறி கொள்முதல் செய்வதற்க்காக 3 ஏஜென்சிகளுக்கு தேவையான வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு நேரடியாக காய்கறி கொள்முதல் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் ஆலோசித்து முடிவு எடுப்பார் என்று தெரிகிறது.

Categories

Tech |