கரூர் மாவட்டம் மேட்டு திருக்காம்புலியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருபவர் மாணவர் பிரசன்னா (10). தாயை இழந்து, மன நிலை பாதிக்கப்பட்ட தந்தையுடன் வசித்து வரும் பிரசன்னா சிறுவயதிலிருந்து சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். வறுமையில் வாழ்ந்து வரும் சிறுவனுக்கு மருத்துவ செலவிற்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை.
இந்நிலையில், சிறுநீரகக் கோளாறை சரிசெய்ய பண உதவி வேண்டி பிரசன்னா மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். இவரும், இவரது இரு சகோதரிகளும் தாயின் சகோதரி வீட்டில் வசித்து வருகின்றனர்.
யாருடைய உதவியும் இல்லாமல் தவித்து வரும் இந்த சிறுவனின் நிலையறிந்து, அரசு உதவி புரிய வேண்டும் என உறவினர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.