தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருக்கும் அவரது இல்லத்திற்கு வந்துள்ளார். அங்கு அவர் உறவினர்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழக மக்கள் அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகள் இணைந்து கொரோனாவிற்கான தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளனர்.
தடுப்பூசிகளை கண்டுபிடித்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கோவிஷீல்டு,கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் இந்தியாவில் இருந்து 150 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருக்கிறது. தடுப்பூசி விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். . நேற்று நாடு முழுவதும் 2 லட்சம் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதில் யாருக்கும் பக்கவிளைவுகள் ஏற்பட வில்லை என்று கூறினார்.