செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இப்ப ஐயா ஆளுநர் ஆர்என் ரவிய நியமிச்சது யாரு ? அவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் தானே. இப்ப ஆர்எஸ்எஸ் அதனுடைய அதிகார அரசியல் அமைப்பான பாரதிய ஜனதாவாலே நியமிக்கப்பட்டவர். அது சார்ந்த சிந்தனைகள். அது சார்ந்த செயல்பாடுகள். அது சார்ந்த தலைவர்களை தான் அவங்க சந்திப்பாங்க.
அது கூடாரமா இருக்குன்னு. இப்ப கேட்க வேண்டியது என்ன இருக்கு ? அது அப்படித்தானே இயங்கும். அதை விட்ற வேண்டி தான். ஆளுநர் வந்து ஒரு ஆள சந்தித்து அரசியல் பேச கூடாதா? தாராளமா பேசலாம். இந்த நாட்டில் பிறக்கிற ஒவ்வொருத்தருக்கும் அரசியல் பேசுறதுக்கு உரிமை உண்டு. என்னைக்கு தயவு செஞ்சு அரசியல் பேசுங்க அப்படின்னு சொல்றோமோ. அன்னைக்கு தான் இந்த நாடு உருப்படும். வாழும். வளரும்.
இதனால ஏன் ஆளுநர சந்தித்து அரசியல் பேசக்கூடாது பேசலாம். யாரும் யாரையும் சந்தித்து பேசலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் அரசியல் பிறக்கிறது என்கிறார் புரட்சியாளர் லெனின். அரசியல் என்கிற எண்ணம் இல்லாதவர் மனிதராக இருக்க முடியாது என்கிறார் நான் சொல்லல. அண்ணல் காந்தி சொல்றாரு. மனிதனாகவே இருக்க முடியாது என்றாரு என தெரிவித்தார்.