தங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய கோரி தயாநிதிமாறன், டி.ஆர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அண்மையில் தமிழக தலைமைச்செயலாளர் சந்திக்க சென்ற திமுக எம்.பிக்களான தயாநிதிமாறன், டி.ஆர் பாலு தங்களை தாழ்த்தப்பட்டவராக நடத்துவதாக பேட்டியளித்தார். தயாநிதிமாறனின் இந்த பேச்சுக்கு கண்டம் எழுந்தநிலையில் தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். இதனிடையே தயாநிதிமாறன், டி.ஆர் பாலு மீது கோயம்புத்தூரை சேர்ந்த சேகர் என்பவர் காவல்நிலையத்தில் புகாரின் கொடுத்தார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்தநிலையில் தங்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்ட நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி திமுக எம்பிக்கள் டி ஆர் பாலு மற்றும் தயாநிதி மாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கின்றனர். இந்த மனுவை நீதிபதி நிர்மல் குமார் இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிக்க இருக்கிறாரார். இன்று காலை பட்டியலின் மக்களை தவறாக பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டு இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.