Categories
உலக செய்திகள்

ஜெயிக்க முடியாதுனு சொல்லுறாங்க…. மக்களை ஏமாற்ற பாக்குறாங்க…. நான் கோர்ட்டுக்கு போறேன்….!!

அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்கையில் அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பேசினார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் ஜோ பிடன் முன்னிலை வகுத்துக்கொண்டு இருக்கும் நிலையில் வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் ட்ரம்ப்,  அமெரிக்க மக்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கு எனது மதம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். ஒரு சிறிய பகுதியினர் நமக்கு வாக்களித்த பெரிய பகுதியினருடைய வாக்குரிமையை தட்டிப் பறிக்க நினைக்கிறார்கள்.

என்னுடைய மனைவிக்கும், குடும்பத்துக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த ஒரு கடுமையான சூழ்நிலையில் எனக்கு துணை நின்று எல்லோருக்கும் நன்றி. இது மகிழ்ச்சிகரமான கொண்டாட்டத்திற்குரிய நேரம். தேர்தல் முடிவுகள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றது. வெற்றிக்கு நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றோம். மிகப்பெரிய அளவில் இந்த நாட்டின் குடிமக்கள் வாக்களித்துள்ளார்கள்.

நாங்கள் எதிர்பார்க்காத மாநிலங்களில் கூட வெற்றி பெற்றுள்ளோம்.  ஒஹையோ வில் வெற்றி பெற்றுள்ளோம். டெக்ஸாஸில் வெற்றி பெற்றுள்ளோம். 7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் டெக்ஸாஸில் வெற்றி பெற்று உள்ளோம். அவர்கள் நம்மோடு போட்டி போட முடியவில்லை. அரிசோனாவில் நம்முடைய வெற்றி சாத்தியம். இப்போது ட்ரம் பகுதிகளுக்குள் நாம் போய்க் கொண்டிருக்கிறோம். ஒருவர் நாமல் வெற்றிபெற முடியாது என்று சொல்லி கொண்டிருக்கின்றார்.

அரிசோனாவில் நாம் வெல்வதற்கு நல்ல வாய்ப்புகள் இருக்கின்றது. அவர்களுடைய எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது, நாம முன்னேறி கொண்டிருக்கின்றோம். மிக முக்கியமாக பென்சில்வேனியாவில் நாம வெற்றி பெறப் போகின்றோம்.பெரிய அளவில் வாக்குகளை பென்சில்வேனியாவில் பெற்றிருகின்றோம்.டெக்சஸ் மாகாண ஆளுநரிடம் நான் கொஞ்ச நேரத்துக்கு முன்பு பேசினேன். அவர் என்னை வாழ்த்தினார், வெற்றி பெற்றதற்காக வாழ்த்தினார். டெக்சஸ் மாகாணத்தில் வென்றெடுப்பதற்காக வாழ்த்தினார். இந்த மாதிரி நான் பார்த்ததே இல்லை என்று என்னிடம் சொன்னார். 81 சதவீதம் வாக்குகளை பெற்று நாம்  டெக்சஸ் மாகாணத்தில் வெற்றி பெற்றுள்ளோம்.

இது ஒரு சிறப்பான இரவு, நாம வெற்றிபெற்ற விகிதாச்சாரத்தை எடுத்துப் பாருங்க,  இந்த மார்ஜின் எடுத்து பாருங்க. என்னெல்லாம் பேசிக்கிட்டு இருக்காங்க இந்த தேர்தலை பற்றி. நான் கோர்ட்டுக்கு போறத பத்தி தொடர்ந்து சொல்லிக்கிட்டு தானே இருக்கேன். அமெரிக்க மக்களை ஏமாற்ற முயற்சி நடக்குது. இந்த தேர்தலில் வெற்றி பெற நாம் தயாராகிக் கொண்டிருந்தோம். வெளிப்படையா சொல்லனும்னா இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.

இந்த நாட்டினுடைய கண்ணியத்தைக் காப்பாற்ற இது ரொம்ப முக்கியமான தருணம். சட்டம் சரியாக பயன்படுத்தப்பட வேண்டும். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை அணுக போறோம். இப்போ நடந்து கொண்டிருக்கக் கூடிய வாக்குப்பதிவை நிறுத்தணும். இப்போ வாக்குபதிவு நடப்பது சரியல்ல. இது ரொம்ப வருத்தத்துக்குரிய விஷயம் என அதிபர் டிரம்ப் பேசினார்.

Categories

Tech |