புதுக்கோட்டையில் சுற்றுலா சென்று வீடு திரும்பிய இளைஞர் வரும் வழியில் பைக் நிலை தடுமாறி மரத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவர் விராலிமலையில் உள்ள ஒரு உணவு விடுதியில் தலைமை சமையல் கலைஞராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அன்னவாசல் சித்தன்ன மலை பகுதியில் சுற்றுலா சென்று சுற்றி பார்த்துவிட்டு பின் வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளார். வரும் வழியில் சித்தூர்பட்டி அருகே வேகமாக சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி,
பைக் மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே அழகர்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த அன்னவாசல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அழகர்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்தும் விசாரித்து வருகின்றனர். இன்பச்சுற்றுலா சென்று முடிவில் விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.