Categories
மாநில செய்திகள்

ஏராளமான வேலைவாய்ப்பு….. ராணுவத்தில் ஆசையா…? கட்டாய வேலைவாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…. அப்புறம் வருத்தப்படுவீங்க….!!

திருவண்ணாமலையில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெற இருக்கிறது.

திருவண்ணாமலையில் ராணுவத்திற்கான ஆள் சேர்க்கும் முகாம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை மாநகரை தலைமையிடமாகக் கொண்டு சென்னை, கடலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,வேலூர்,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இருந்தும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

விருப்பமுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 1 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு வயது வரம்பாக  17 1/2 வயதுமுதல் 23 வயதுவரை மட்டுமே நிர்ணியக்கப்பட்டுள்ளது. இதில் சிப்பாய், தொழில்நுட்பம், செவிலியர், உதவியாளர், ச பொதுப்பணி, எழுத்தர் , வர்த்தகர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் எடுக்கப்படுகிறது.

ஆகையால் இந்த ஆள் சேர்ப்பு முகாமில் ராணுவத்திற்கு ஆட்கள் எடுக்க எந்தவிதமான எண்ணிக்கைக் நிர்பந்தமும் இல்லை. எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டாலும், அத்தனை பேருக்கும் கட்டாயம் வேலை உண்டு. எனவே அனைத்து தகுதியுள்ள இளைஞர்களும் அதிகமான எண்ணிக்கையில் இந்த வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்தி வேலையை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

குறிப்பாக அனைத்து பதிவேற்றத்தையும் ஆன்லைனில்  செய்ய வேண்டுமென்பதால், யாரும் எதையும் மாற்ற இயலாது. எனவே திறமை மயிரும் தகுதி வாய்ந்தவர்கள் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |