பிளஸ்-1 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் கவுரிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாசங்கர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் உமாசங்கர் இரவில் படுக்கை அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனைப் பார்த்த கவுரிசங்கரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து பெருமாள்புரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உமாசங்கரின் உடலை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.