பிளஸ்-1 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட இருப்பதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு ஆண்டுதோறும் அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2021-2022-ம் கல்வி ஆண்டில் படித்த மாணவ, மாணவிகளுக்கு 12,969 இலவச சைக்கிள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் வடமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட சைக்கிள்களுக்கான உதிரி பாகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து வடமாநில தொழிலாளர்கள் சைக்கிள் உதிரி பாகங்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் சுமார் 1,000 சைக்கிள்கள் பொருத்தப்பட்டு தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் . விரைவில் இந்த சைக்கிள்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட இருப்பதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.