பிளஸ் டூ மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள தாசையாபுரம்-இலவன்குளம் சாலையில் சாமுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராகவன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சங்கரன்கோவிலில் உள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராகவன் அடிக்கடி செல்போனில் ‘கேம்’ விளையாடிக் கொண்டிருந்தார். இதனை கவனித்த பெற்றோர் செல்வராகவனை கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த செல்வராகவன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வராகவனின் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.