பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகுணா என்ற மகள் இருந்துள்ளார். இவர் வள்ளியூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால் மாணவி சுகுணா வீட்டில் இருந்துள்ளார். அப்போது சுகுணா யாருடனும் சரியாக பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். இந்நிலையில் அனைவரும் வீட்டில் தூங்க சென்றதும் சுகுணா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு பெற்றோர் விரைந்து சென்று பார்த்தபோது சுகுணா தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அவரது பெற்றோர் சுகுணாவை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுகுணா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பணக்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுகுணாவின் உடலை கைப்பற்றி நாகர்கோவில் அரசு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணவி தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.