12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு எழுத தவறவிட்ட மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படுவதாக அண்மைச் செய்தி வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அப்போது நடைபெற்ற பிளஸ் 2 வகுப்புக்கான வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் போன்ற தேர்வினை பல மாணவர்கள் எழுத முடியாத நிலையில் ஏற்பட்டது. அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொரோனாவால் நடத்த திட்டமிட்டுப்படிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதா நிலையில் தற்போது பிளஸ் – 2 மாணவர்களுக்கு இப்படியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவதற்கான மாணவர்களின் விருப்பத்தை வரும் 24ம் தேதிக்குள் பெற உத்தரவு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வு இயக்குனர் பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். மாணவர்களிடம் விருப்ப கடிதம் பெற்று தேர்வு எண் வாரியாக அடுக்கி ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.