Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை… பரபரப்பு..!!

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் டூ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்த வண்ணமே உள்ளது. கடுமையான சட்டங்கள், தண்டனைகள் உருவாக்கப்பட்ட போதிலும் இதற்கு தீர்வு கிடைத்தபாடில்லை. பெண் குழந்தைகள் வெளியில் அனுப்புவதற்கு கூட பெற்றோர்கள் மிகுந்த அச்சம் கொள்கின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், வி.நெற்குன்றத்தில் திருமண ஆசைகாட்டி பிளஸ்டூ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி அளித்த புகாரின் பேரில், சூர்யா என்ற இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். நாகையில் கோயிலில் 50 வயது பெண், தாம்பரத்தில் ரயில் நிலையத்தில் பெண் வியாபாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் இன்று மாணவிக்கு இந்தத் துயரம் நடந்துள்ளது.

Categories

Tech |