வீடு கட்ட மானியம் வழங்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் கூடுதலாக 3 வருடங்களுக்கு நீடிக்கபடுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், ஆவாஸ் யோஜனா திட்டம் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் கொண்ட 2.95 கோடி வீடுகள் கட்டுவதற்கான இலக்கை அடைய முடியும்.
மேலும் ஏற்கனவே கட்டுமானத்தில் இருக்கும் வீடுகளையும் கட்டிமுடிக்க இந்த நீட்டிப்பு உதவும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கிராமப்புறங்களில் அனைவருக்கும் வீட்டு வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய கிராமப்புற பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் நீட்டிப்பு செய்யப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.