Categories
தேசிய செய்திகள்

PM ஆவாஸ் யோஜனா திட்டம்: புது ரூல்ஸ் வந்துட்டு…. இவர்களுக்கு வீடு கிடைக்காது….!!!!

மத்திய அரசு மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்கள் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று வீடு கட்டலாம். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் 2.67 லட்சம் வரையில் மானிய உதவி கிடைக்கும். குடும்ப ஆண்டு வருமானத்தை வைத்து இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்படுகிறது. இதில் பயன் பெறுபவர்கள் வேறு எந்த அரசாங்க வீட்டு வசதி திட்டத்தில் பயன் அடைந்து இருக்கக்கூடாது.

முதன்முறையாக இந்த திட்டத்தில் இணைந்து இருக்க வேண்டும். இது போல சில விதிமுறைகள் இருக்கின்றன. இந்த திட்டத்தின் மூலமாக வீடு இல்லாதவர்களுக்கு நிரந்தரமாக ஒரு வீடு கிடைத்துள்ளது. இந்த திட்டத்தில் ஒரு பிரச்சினை உள்ளது. ஏராளமானவர்கள் இதில் வீடு வாங்கி விட்டு அதை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி வீடு கிடைத்தும்  பயன்படுத்தாமல் பொது இடங்களிலும், பழைய ஓட்டு வீடுகளிலும் தங்குவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது .

இந்நிலையில் மத்திய அரசு இந்த திட்டத்திற்கான விதிமுறைகளை கடுமையாக்கி உள்ளது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் வீடு வாங்கியவர்கள் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக அதே வீட்டில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அவர்களிடம் இருந்து வீடு பறிக்கப்படும். வீடு கட்ட செலுத்திய பணம் திரும்பக் கிடைக்காது. ஐந்து வருடங்களுக்கு குத்தகைக்கு இருப்பது போலவே இருக்க முடியும். ஐந்து வருடங்கள் முடிந்த பிறகு மீண்டும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும். இதன்மூலம் முறைகேடுகளை தடுக்க முடியும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக கான்பூரில் ஒப்பந்த அடிப்படையில் வீடுகளை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. ஒருவேளை வீட்டின் உரிமையாளர் இறந்துவிட்டால் அவருடை.ய குடும்ப உறுப்பினருக்கு வீட்டின் உரிமை மாற்றபடும். வேறு யாருக்கும் மாற்ற முடியாது.

Categories

Tech |