மத்திய அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மானியத்தோடு வீடு கட்டிக் கொடுக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் 2.67 லட்சம் வரையில் மானிய உதவி கொடுக்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டுக்குள் 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளை கட்டி முடிக்க இந்தத் திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாகவும், பின்தங்கிய, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியங்களையும் இந்தத் திட்டம் வழங்குகிறது.
இந்நிலையில் இந்தத் திட்டத்தில் பயன்பெருபவர்களுக்கு மேலும் ஒரு சலுகை கிடைக்க உள்ளது. அதாவது இந்த திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் திடீரென்று இறந்து விட்டாலோ அல்லது விபத்து ஏற்பட்டால் உடலில் குறைபாடு ஏற்பட்டாலோ அவர்களுக்கு காப்பீடு வழங்க இந்திய தொழில்துறை கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதற்கான ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கோரிக்கை ஏற்கப்பட்ட உடன் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் உள்ள வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு உதவியும் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.